நூலகம் .

சட்டக் கல்வியை மாணவர்களிடத்தில் பரப்புவதில் இந்தக் கல்லூரி நூலகமானாது மிக முக்கிய பங்குவகிக்கிறது. சட்ட நூலகமானது மற்ற நூலகத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டு விளங்குவதற்கு மிக முக்கிய காரணம் சட்டம் போன்ற தொழிற்கல்வியை புத்தகங்கள் இன்றி பயில இயலாது அவைதான் இக்கல்விக்கு அடிப்படை மற்றும் இன்றியமையாதது. சட்டப் புத்தகங்கள் என்பது மற்ற இலக்கிய பாடங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டது மட்டுமின்றி தன்னுடைய சுயத்தன்மையினாலும் வேறுபட்டதாக விளங்குகின்றது.

நூலக சேமிப்புகள்:

13000 மேற்பட்ட பொது மற்றும் தனி பாடப்பிரிவு புத்தகங்கள், மேற்கோள் குறிப்பு புத்தகங்கள், 2000 மேற்பட்ட  சட்ட சஞ்சிகைகள் மற்றும் அறிக்கைகள் போன்ற எண்ணற்ற தற்கால சட்ட காலேடுகளைக் கொண்டுள்ளது .

நூலகத்தைப் பயன்படுத்துபவர்கள்:

கல்லூரியில் பயிலும் 1250 மாணவர்களின் கல்வித் தேவையைப் பூர்த்தி செய்யும் அறிவுக்களஞ்சியமாக விளங்குகின்றது. பேராசிரிய பெருமக்கள், ஆராய்ச்சி மாணவர்கள், நூலக பயிற்சியாளர்கள் ஆகியவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அவர்களுக்குத் தேவையான குறிப்புகளை எடுப்பதற்கு ஏதுவாக அவர்களுக்கு பயன்படும் வகையில் எப்பொழுதும் திறந்தே வைக்கப்பட்டுள்ளது.

நூலகப் பிரிவுகள்:

இந்நூலகமானது கீழ்குற்றிப்பிட்டுள்ள பிரிவுகளைக் கொண்டுள்ளது;

  1. நூல் வழங்கும் பிரிவு
  2. சஞ்சிகைப் பிரிவு
  3. மேற்கோள் பிரிவு

மாணவர்களிடையே வளர்ந்து வரும் இணையப் பயன்பாட்டினைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு பயன்படும் வகையில் கீழ்கண்ட இணையப் பிரிவானதுத் தொடங்கப்பட்டுள்ளது.

  1. மின் இணைய மண்டலம்.

சட்ட முதுகலை மாணவர்களின் நூல் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் அவர்களுக்கான தனியான பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.